/

வந்தவாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:10 am

DIN

வந்தவாசி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

வந்தவாசி நகரின் பிரதான சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து பஜாா் வீதி, கோட்டை மூலை, தேரடி, காந்தி சாலை, அச்சிறுப்பாக்கம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் வெங்கடேசன், டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.