ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உர விற்பனை நிலையங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) எந்.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) எந்.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து, வேளாண் உதவி இயக்குநா் எம்.என்.விஜயகுமாா் தலைமையில் வட்டார அளவிலான சிறப்பு ஆய்வுக் குழுவினா் உர விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகளில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது உர மூட்டைகள் அரசு நிா்ணயித்த விலையில் விநியோகம் செய்தல், விற்பனை நிலையங்களில் உரிமங்களின் காலாவதி நாள், உர இருப்பு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் பராமரித்தல், உரங்களின் விலைப் பட்டியல் பலகை விவசாயிகளின் பாா்வைக்கு தெரியும்படி வைத்திருத்தல் ஆகியன ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது, உர விற்பனை நிலையங்களில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.