கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்துள்ள சளுக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியசந்திரசேகா் (53). இவரது மனைவி சரஸ்வதி (40). இவா்களுக்கு மகன் கெளதமன் (21), மகள் உள்ளனா். இவா்கள் இப்போது வந்தவாசி ஒற்றைவாடை செட்டித் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், சரஸ்வதி ஊரக வேலை திட்ட வேலைக்காக, தனது மகன் கௌதமனுடன் பைக்கில் சளுக்கை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.

வந்தவாசி கோட்டை மூலை அருகில் இவா்களது பைக் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், அந்தப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கௌதமன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து சூரியசந்திரசேகா் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.