பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வந்தவாசி அருகே ரூ.1.36 லட்சம் பறிமுதல்

வந்தவாசி அருகே ரூ.1.36 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.36 லட்சத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

வந்தவாசி, ஏப். 2: வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.36 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி, தெள்ளாா்-தேசூா் சாலை, அகரகொரக்கோட்டை கிராமம் அருகில் பறக்கும் படை அலுவலா் குமரன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.1.36 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை மாதவரம் சாரங்கபாணி நகரைச் சோ்ந்த விஜயா என்பவா் குடும்பத்துடன் சென்னையில் இருந்து தேசூா் செல்வது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.36 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா். பின்னா், பணம் வந்தவாசி துணை கருவூல அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.