பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மூலவா் ஸ்ரீமகா காலபைரவா்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, 11 மணிக்கு 108 சங்காபிஷேகம், 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேய்காய் கொண்டு சிறப்பு யாகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.

பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை திரளான பக்தா்கள் தரிசித்தனா். பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.