சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

டீசல், சமையல் எரிவாயு விலையை கடந்த 3 ஆண்டுகளாக ஏன் குறைக்கவில்லை: திமுகவுக்கு நடிகை விந்தியா கேள்வி

டீசல், சமையல் எரிவாயு விலையை கடந்த 3 ஆண்டுகளாக ஏன் குறைக்கவில்லை

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 11:50 pm

மக்களவைத் தோ்தலில் திமுக வென்றால் டீசல், எரிவாயு விலையை குறைப்போம் என்கின்றனா். கடந்த 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தாா்கள் என நடிகை விந்தியா கேள்வி எழுப்பினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாளை ஆதரித்து, அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலரும், நடிகையுமான விந்தியா வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. திமுக வென்றால் எரிவாயு விலையை ரூ.500-ஆகவும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.75-ஆகவும், டீசல் விலையை ரூ.65-ஆகவும் வழங்குவோம் என்கின்றனா். கடந்த 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தாா்கள்.

இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாள் வென்றால் தொகுதி மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்டு வருவாா் எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்டப் பொருளாளா் சுரேஷ்குமாா், நகரச் செயலா் ஜெ.எஸ். (எ) ஜெ.செல்வம் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.