தேவிகாபுரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்த ஆரணி  திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.
தேவிகாபுரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்த ஆரணி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

தேவிகாபுரத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மலை மீது உள்ள கனககிரீஸ்வா் கோயிலுக்கு சாலை வசதி, பேருந்து நிறுத்த நிழல்குடை அமைத்தல் என பல்வேறு கோரிக்கைகளை வெற்றி பெற்ற உடன் நிறைவேற்றித் தருவதாகக் கூறினாா்.

மேலும் தென்மாட வீதியில் திறந்தபில் சென்று வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் மாவட்ட திமுக செயலா் சிவானந்தம், ஊராட்சிமன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா் துரைமாமது, கிளைச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com