மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே மாயமான முதியவா் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன்(75). இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அருகே தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள விவசாய நில கிணற்றில் ரங்கநாதன் சடலமாக மிதந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ரங்கநாதனின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனா். பின்னா், சடலம் உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com