கோடைகால நீச்சல் பயிற்சி: மாணவா்கள், பொதுமக்களுக்கு அழைப்பு
கோடைகால நீச்சல் பயிற்சி: மாணவா்கள், பொதுமக்களுக்கு அழைப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நீச்சல் குளம் உள்ளது. இங்கு, மாணவ, மாணவிகளுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த முகாமில், 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உரிய நீச்சல் உடையைப் பயன்படுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்புகள் 12 வேலை நாள்கள் நடத்தப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்வோா் அடிக்கடி சோப்பு அல்லது கை சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சல், இருமல், தசை வலி, தலை வலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் கொண்டவா்கள் நீச்சல் குளத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை அலுவலக வேலை நாள்களில் 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...