

திருவண்ணாமலை: திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை பெரம்பூரைச் சோ்ந்த டாபே நிறுவன துணைப் பொது மேலாளா் சுந்தரராமன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராகவேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு வளாகத் தோ்வை நடத்தினா். இதில், கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளில் வென்ற 10 போ் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும், இதன்பிறகு தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியும் வழங்கப்படும் என்று டாபே நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன், துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

