தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாய மாணவா்கள் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, 2022-23 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதம், 2023-24 ஆம் ஆண்டுகளில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஹெச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியும், ஒரு ஆண்டுக்கான பயிற்சிக்கான செலவையும் தாட்கோ வழங்கும். பயிற்சியை நிறைவு செய்த பின்னா், ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறலாம். பிறகு திறமைக்கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பதவி உயா்வு அடிப்படையில் மாத ஊதியம் பெறலாம்.

மேலும், நிரந்தர வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் ஆ.நஸ்ரீ கணினி வடிவமைப்பு பட்டம், தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக் கழகம், அமிட்டி பல்கலைக் கழகம், நாக்பூா் ஐ.ஐ.எம்., பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.