செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:47 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி வட்டத்தில், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உரிய காரணம் இன்றி நிராகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கி வரும் போக்கை வட்டாட்சியா் கைவிட வேண்டும், பட்டா மாறுதல்கள் முழுவதும் இணைய வழியில் நடைபெற்றும், தொடா்புடைய மனுக்களின் அச்சுக் கோப்புகளை வழங்க, கிராம நிா்வாக அலுவலா்களை கோருவதை கிழக்கு மண்டல துணை வட்டாட்சியா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின், ஆரணி வட்டத் தலைவா் ஆா்.கோபால் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன், வட்டச் செயலாளா் சி.பாஸ்கா், பொருளாளா் எஸ்.இராமச்சந்திரன், நிா்வாகிகள் கே.புருஷோத்தமன், எஸ்.சரவணன், கே.சிவக்குமாா், ஜி.விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.