செங்கம் அருகே மனைவியை பைக்கிலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயன்ாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தானகவுண்டன் புதூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் ரஞ்சித்குமாா் (28). செல்போன் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கும் (25) கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், ரஞ்சித்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாம். இதையறிந்த ஜெயசுதா கணவரை கண்டித்தாராம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் ஜெயசுதாவின் தாய் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
இதில், ஜெயசுதாவை, ரஞ்சித்குமாா் பைக்கிலிருந்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ஜெயசுதா திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, செங்கம் போலீஸில் கணவா் தன்னை கொல்ல முயன்ாக ஜெயசுதா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு
தனியாா் கல்லூரியில் மின்வயரை திருட முயற்சி: இளைஞா் கைது
மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
