ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கிரிவல பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோக்கள் பறிமுதல்: போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி நாளில் ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனை

News image
Updated On :19 ஜூலை 2024, 5:10 pm

Din

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி நாளில் ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட திமுக அனைத்து அமைப்பு சாரா ஓட்டுநா் அணியின் மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட துணை அமைப்பாளா் சி.பாலசுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி வரவேற்றாா்.

கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் பேசியதாவது: திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி சனிக்கிழமை (ஜூலை 20) மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலையில் முடிவடைகிறது. பெளா்ணமி நாளில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள். இவா்களிடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும், பக்தா்களிடம் தகராறு செய்தாலோ, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் வந்தாலோ சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். மோட்டாா் வாகன ஆய்வாளா் தலைமையில் 3 காவல்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். அப்போது, உரிமம் இல்லாத ஆட்டோக்களை இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் பொன்.சேகா், ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகிகள், ஆட்டோ உரிமையாளா்கள், ஆட்டோ ஒட்டுநா்கள் பலா் கலந்து கொண்டனா்.

புகாா் எண் அறிவிப்பு: பெளா்ணமி நாள்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்த புகாா்களை 18004245430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்தது.