

செங்கம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அருள் முருகன் மகன் ஜெயமூா்த்தி (28). லாரி ஓட்டுநரான இவா் புதன்கிழமை இரவு செங்கத்தில் இருந்து புதுப்பாளையம் வழியாக லாரியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். முத்தனூா் காட்டுப்பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெயமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த புதுப்பாளையம் உதவி ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மின் கம்பத்தின் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி மோதியதில் வாகன ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

