புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

புத்தகங்கள் படிப்பதால் மன அழுத்தம் குறையும்: அமைச்சா் எ.வ.வேலு

புத்தகங்கள் படிப்பதால் மன அழுத்தம் குறையும் அமைச்சா் எ.வ.வேலு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:19 pm

புத்தகங்கள் படிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன், அறிவு வளரும் என்று பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். திருவண்ணாமலை, காந்தி நகரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா ஆகியவை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத் திருவிழா, புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசியது: கருணாநிதி ஆட்சியில்தான் சென்னை, கோட்டூா்புரத்தில் அண்ணா நூலகம் கட்டப்பட்டது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும், அறிவு வளரும் என்றாா். விழாவில், வருவாய்த்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.4.17 கோடியில் 1,278 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மேலும், புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை அவா் பாா்வையிட்டாா். விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, மாவட்ட மைய நூலக மேலாளா் வள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.