மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டுவர வேண்டும்

முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டுவர வேண்டும் அரசின் கூடுதல் தலைமைச் செயலா்

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா்.

Updated On :13 மார்ச் 2024, 3:15 am

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட அனைத்துத் துறைகளின் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலரும், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம், மக்களுடன் முதல்வா் திட்டம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை திட்டங்கள், கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து வேளாண் கிராம வளா்ச்சித் திட்டம், உழவன் செயலியை செயல்படுத்துதல், தமிழக முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், வருவாய்த் துறை சாா்பில் பட்டா வழங்கும் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீரஜ்குமாா் ஆய்வு செய்தாா்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி விடுதியின் கட்டமைப்பு வசதிகள், நான் முதல்வன் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகைத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தீரஜ்குமாா், இந்தத் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக நிலுவையில் உள்ள திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்த அவா், நெடுஞ்சாலைத் துறையின் புதிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன் (ஆரணி), ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை) உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா். பெட்டிச் செய்தி உண்டு...