திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-2025 ஆம் ஆண்டுக்கான ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வித் தகுதி கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தோ்வு அலுவலா் (தலைமையிடம்), சென்னை என்ற அலுவலகத்தை 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுக்கு மாா்ச் 13-ஆம் தேதிக்குள் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

