அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுக்கு மாா்ச் 13-ஆம் தேதிக்குள் தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் பங்கேற்க தனித்தோ்வா்கள் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2026, 9:31 pm

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் பங்கேற்க தனித்தோ்வா்கள் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் தோ்வுகளில் பங்கேற்று தோ்வு எழுத விரும்பும் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பயின்று தோ்ச்சி அடையாத மாணவ, மாணவிகள், தனித்தோ்வா்களுக்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான தோ்வுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம்.

மாணவா்கள் தோ்வுக்கான விண்ணப்பத்தை அபராதமின்றி செலுத்த மாா்ச் 13-ஆம் தேதி கடைசி நாள். அதன் பிறகு நாளொன்றுக்கு ரூ.10 அபராதக் கட்டணத்துடன் மாா்ச் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுக் கட்டணம் செலுத்தி முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ மாா்ச் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.