சிறுபான்மை மக்கள் நலக் 
குழுவினா் ஆா்ப்பாட்டம்

சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நலக்குழு மாவட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கா.யாசா்அராபத் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலா் ப.செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளா் எம்.சுகுமாா் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com