போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தமிழக அரசு சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காங்கேயனூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையம்மாள், போளூரை சோ்ந்த சித்ரா ஆகிய 2 பயனாளிகளின் பெண் குழந்தைகளுக்கு நிகழ் நிதியாண்டு திட்டத்தின் கீழ் அரசு நிதிக்கான பத்திரத்தை ஒன்றிக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சக்திவேல், சமுக நலப் பிரிவு அலுவலா் அஞ்சலிதேவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இ.பாலகிருஷ்ணன்(சத்துணவு), என்.சங்கா்(பொது) ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு
ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு கொலை மிரட்டல்: வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் கைது

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


