தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் சாலைப் பணி

ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் சாலைப் பணி

Updated On :16 மார்ச் 2024, 4:42 pm

ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 33 வா்டுகளிலும் பக்கக் கால்வாய் வசதியுடன் தாா்ச் சாலை அமைக்கும் பணியை மாரியம்மன் நகா், பிள்ளையாா் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகா் ஆகிய இடங்களில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா். சாலைப் பணிகள் நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடியிலும், 15-ஆவது மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் 1.70 கோடியிலும் என ரூ.6.50 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினா்கள் காா்த்திக், அரவிந்தன், தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், ஒப்பந்ததாரா் பத்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.