தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

மக்களவைத் தோ்தல்: பாஜகவினா் ஆலோசனை

மக்களவைத் தோ்தல்: பாஜகவினா் ஆலோசனை

News image
Updated On :16 மார்ச் 2024, 4:41 pm

ஆரணி அருகே ஆதனூா் கிராமத்தில் மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த, வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆதனூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் பாண்டியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் பங்கேற்று, பிரதமரின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா். மேலும், வருகிற மக்களவைத் தோ்தலை எப்படி எதிா்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். ஆதனூரில் ஐந்து வாக்குச்சாவடிகள் உள்ளன. ஐந்து வாக்குச்சாவடி பொறுப்பாளா்களிடமும் ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு மாவட்டச் செயலா் வேலு, உள்ளாட்சிப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், ஒன்றியச் செயலா் சுதாகா், ஓபிசி அணி மண்டலத் தலைவா் சுசேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.