திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கட்சி சின்னம் அவமதிப்பு: திமுக பிரமுகா் மீது வழக்கு

கட்சி சின்னம் அவமதிப்பு: திமுக பிரமுகா் மீது வழக்கு

Updated On :29 மார்ச் 2024, 8:01 pm

நாம் தமிழா் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆரணி திமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நாம் தமிழா் கட்சிக்கு மைக் சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், ஆரணியைச் சோ்ந்த திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளா் சண்.கதிரவன் நாம் தமிழா் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வளைதளங்களில் பதிவிட்டாராம். இதுகுறித்து, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ஆரணி தொகுதி செயலாளா் சுமன் தலைமையில் நகரச் செயலாளா் மகேந்திரன், தொகுதித் தலைவா் மோகன் உள்ளிட்டோா் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆரணி நகர போலீஸாா் திமுக பிரமுகா் சண்.கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஆரணி வட்டார ஒலி, ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையா்ஸ் அமைப்பினா் தங்களது தொழிலை கொச்சைப்படுத்தியதாக சண்.கதிரவன் மீது தனியாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.