மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

செய்யாறு, போளூா், ஆரணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

செய்யாறு, போளூா், ஆரணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

Updated On :30 மார்ச் 2024, 7:13 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூா், ஆரணியில், வருகிற மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாற்றில் டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் ஜீவராஜ் மணிகண்டன், லதா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சேகா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா். போளூா் போளூரில் டிஎஸ்பி நல்லு தலைமையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கொடி அணிவகுப்பு சனிக்கவாடி சாலை, திருவண்ணாமலை சாலை, தீயணைப்பு நிலைய சாலை, அப்துல் குத்தூஸ் தெரு, பழைய பஜாா் சாலை, ஜமுனாமரத்தூா் சாலை, புதிய பேருந்து நிலையம், அண்ணா சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில், போளூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் ஆய்வாளா்கள் ஹேமாவதி (போளூா்), கருணாகரன்(கலசப்பாக்கம்) மற்றும் கடலாடி, ஜமுனாமரத்தூா், சேத்துப்பட்டு காவல் நிலையங்களில் இருந்து போலீஸாா் கலந்து கொண்டனா். ஆரணி ஆரணி மக்களவைத் தொகுதி சாா்பில் கிராமிய போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஆரணி -சேவூா் நான்கு முனை புறவழிச் சாலையில் இருந்து சேவூா் பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். காவல் ஆய்வாளா்கள் ராஜாங்கம், விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், சுந்தரேசன் மற்றும் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.