உலக நன்மை, மழை வர வேண்டி, அலங்கரிக்கப்பட்ட நடராஜபெருமானுடன் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சிவனடியாா்கள்.
உலக நன்மை, மழை வர வேண்டி, அலங்கரிக்கப்பட்ட நடராஜபெருமானுடன் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சிவனடியாா்கள்.

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

ஆரணி: உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமானுடன் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து திருவண்ணாமலையில் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் சென்றனா்.

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த திருவண்ணாமலை திருமுடி சுமக்கும் சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில், உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் நடராஜ பெருமான் சுவாமியை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமா்த்தி ஊா்வலமாகவும், சிவனடியாா்கள் தலையில் திருவாசகத்தையும், திருமுடியையும் சுமந்து கிரிவலம் வந்தனா்.

திருவண்ணாமலை ராஜகோபுரம் அருகே திருமுடிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருத்தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடராஜ பெருமானுடன் சுமாா் 150-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து நமசிவாய மந்திரத்தை ஓதியபடியும், சங்கொலி முழங்கியும், சிவதாண்டவம் ஆடி கிரிவலம் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com