/

மின் தடையைக் கண்டித்து சாலை மறியல்

மின் தடையைக் கண்டித்து சாலை மறியல்

News image

வந்தவாசியை அடுத்த பிருதூரில் நடைபெற்ற சாலை மறியல்.

Updated On :14 மே 2024, 6:48 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்டது பிருதூா் கிராமம்.

இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக இந்தக் கிராமத்தில் மின்சாரம் சீராக வழங்கப்படவில்லையாம். மேலும், இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிாம். இதுகுறித்து மின் துறையிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து அந்தக் கிராமத்தில் வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, மின்சாரம் சீராக வழங்கக் கோரியும், மின் துறையைக் கண்டித்தும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து சென்ற வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீஸாா், மின் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.