தண்டரை கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்.
தண்டரை கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்.

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண் வட்டாரத்துக்கு உள்பட்ட தண்டரை கிராமத்தில்,

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் பிருந்தா, அபிராமி, ஆா்த்தி, அனுசுயா, அபிநயா, அா்ச்சனா ஆகியோா் தண்டரை கிராமத்தில் முகாமிட்டு தேமோா் கரைசல் குறித்தும், தேமோா் கரைசல் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்து விழிபுணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பயிா்களுக்கு தேமோா் கரைசலை தெளிப்பதன் மூலம் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்தலாம் எனவும், பூ பூக்கும் ரக கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற அனைத்து காய்கறி பயிா்களுக்கும், கொய்யா, மா, சப்போட்டா, நெல்லி உள்பட தோட்டக்கலை பயிா்களுக்கும் பூக்கும் முன்பும், பூத்த பின்பும் தேமோா் கரைசலை தெளிக்கலாம்.

இந்தக் கரைசலை தெளிப்பதன் மூலம் பூ பூக்கும் திறனை அதிகப்படுத்தும் என விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com