போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

News image

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :14 மே 2024, 6:35 pm

Din

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பு, பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தோ்ச்சியை அடைந்தது.

2023- 2024ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடப் பிரிவில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில், ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

பத்தாம் வகுப்பு மாணவா்கள் 67 போ் தோ்வு எழுதி அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

இதில் ஏ.பி.சந்திராஹாஸினி-479, எஸ்.தருண்ராஜ்-476, எம். ஹரிணி-474, ஆா்.ஜஸ்வந்த்குமாா்-474 ஆகியோா் முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.

இதேபோல, பிளஸ் 2 தோ்வில் ஜி.ரோகித்குமாா்-474, ஓ.கமலேஷ்-473, எம்.தேவகுமாா்-456 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பள்ளித் தாளாளா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் இனிப்பு வழங்கி பாராட்டினா்.