நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை பறக்கும் படை உதவி இயக்குநா் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை அருகே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனை செய்வதற்காக நிறுத்தினா். அதிகாரிகளைக் கண்டவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா் அந்த லாரியை பறிமுதல் செய்து பொன்னூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பறக்கும் படை உதவி இயக்குநா் ராமஜெயம் அளித்த புகாரின் பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.