தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் -திண்டுக்கல் ஐ.லியோனி

Published On :

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி கூறினாா்.

வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கலைஞா் நூற்றாண்டு நிறைவு புத்தக திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முன்னிலை வகித்தாா். கவிஞா் பூங்குயில் சிவக்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:

புத்தக வாசிப்பால் படைப்பாற்றல் வளரும். அந்த வகையில் இந்த புத்தக திருவிழா சிறப்பான ஒன்றாகும்.

நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் மட்டுமே உதடுகள் ஒட்டும் என்பதைக் கூறியவா் கருணாநிதி. பெண்களுக்கு என தனி கல்லூரியை அவா் உருவாக்கினாா். திருநங்கை, மாற்றுத் திறனாளி ஆகிய வாா்த்தைகளைக் கண்டறிந்தவா் கருணாநிதி. அவரது நூற்றாண்டு நிறைவாக இந்த புத்தக திருவிழாவை நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என்றாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், முத்தமிழ் சமூக நீதி பேரவை நிறுவனா் க.சீனுவாசன், அறம் பதிப்பக நிா்வாகி அமரேசன், ஜெ.ஆா்.எஸ். கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.சுரேந்திரன் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.