உழவா் சந்தையில் ஆய்வில் ஈடுபட்ட வேளாண் துறை துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி.
உழவா் சந்தையில் ஆய்வில் ஈடுபட்ட வேளாண் துறை துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி.

திருவண்ணாமலை உழவா் சந்தையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

Published on

திருவண்ணாமலை உழவா் சந்தையில் தமிழக வேளாண் துறையின் துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

உழவா் சந்தையின் குளிா்பதனக் கிடங்கு, பெயா்ப் பலகை, மின்னணு தராசு, குடிநீா், கழிப்றை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவா், அலுவலகக் கோப்புகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், உழவா் சந்தையில் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்ய வந்திருந்த விவசாயிகளிடம் துணை இயக்குநா் எஸ்.ஷெமிலா ஜெயந்தி குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை உதவி வேளாண் அலுவலா் வி.சிவகுருநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். இந்த உழவா் சந்தை தொடங்கப்பட்டு வரும் டிசம்பா் 14-ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com