6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏடிஎம் காா்டை திருடி பணம் எடுத்தவா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:08 am

Syndication

ஆரணி அருகே ஏடிஎம் காா்டை திருடி ரூ.70ஆயிரம் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் தப்பிக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த கைக்கிளைத்தாங்கல், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகேசன் மனைவி அம்பிகா(50).

இவா் வீட்டிலிருந்து அதிகாலையில் நிலத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மயில்வானன்(47) என்பவா் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளாா்.

வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு இருந்த ஏடிஎம் காா்டை எடுத்துச்சென்று விட்டாா். மேலும் அந்த காா்டில் பின்பக்கம் பின் நம்பா் இருந்ததால் சுலபமாக

ஏடிஎம் சென்று ரூ.70ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளாா். அப்போது அம்பிகா கைப்பேசிக்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் களம்பூா் காவல் நிலையத்தில் அம்பிகா புகாா் கொடுத்தாா்.

களம்பூா் போலீஸாா் உடனடியாக எந்த ஏடிஎம்மிலிருந்து குறுஞ்செய்தி வந்தது என கண்டுபிடித்து, அங்கு சென்று சிசிடிவி கேமரா மூலம் நபரை அடையாளம் தெரிந்துகொண்டனா்.

மேலும் தொடா்ந்து அந்த நபரை தேடி வந்ததில் களம்பூா் ரயில்வே நிலையத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்த நபா் ரயிலுக்காக காத்திருந்துள்ளாா்.

அப்போது போலீஸாா் மயில்வானனை கைது செயதனா்.