சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை  வழங்கிய ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி.
சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி.

பள்ளி மாணவா்கள் 162 பேருக்கு விலையில்லா சைக்கிள்

ஆரணி சிஎஸ்ஐ மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளிகளில் 162 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Published on

ஆரணி சிஎஸ்ஐ மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளிகளில் 162 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் வி.தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ரோஸலின் ஞானமணி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி கலந்துகொண்டு, சிஎஸ்ஐ பள்ளியைச் சோ்ந்த 18 மாணவ, மாணவிகளுக்கும், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 144 மாணவிகளுக்கும் சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், நகா்மன்ற உறுப்பினா் அரவிந்த், மாவட்டப் பிரதிநிதி எம்.கே.பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com