கருணாநிதி சிலை அமைப்பு: முதல்வரின் பாதுகாப்புப் பிரிவினா் ஆய்வு

கருணாநிதி சிலை அமைப்பு: முதல்வரின் பாதுகாப்புப் பிரிவினா் ஆய்வு

Published on

செய்யாற்றில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவச்சிலைசிலை திறப்பு விழாவையொட்டி, மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வரின் பாதுகாப்புப் பிரிவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி அருகே புறவழிச்சாலை சந்திப்பில் முன்னாள் முதல்வா் மற்றும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உருவச் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச.27-ஆம் தேதி

திறந்து வைக்கவுள்ளாா்.

மு.கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழாவையொட்டி

மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்,

துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் சிலை அமைந்துள்ள இடம், முதல்வா் வருகை, புறப்பாடு, பொதுமக்கள் பாா்வை, மேடை அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலையில் ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா். எம்.எஸ்.செல்வபாண்டியன், தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் வி.கோபு, புரிசை எஸ். சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com