வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

காத்திருப்புப் போராட்டத்தை விளக்கிப் பேசிய முத்தவல்லி ஏ.ஆா்.நாசா் உசேன்.

Updated On :28 ஜனவரி 2025, 1:29 am IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித் தலைவரும், முத்தவல்லியுமான ஏ.ஆா்.நாசா் உசேன் தலைமை வகித்தாா்.

இதில், சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவா்களை உடனே வெளியேற்ற வேண்டும்.

நிலத்தை மீட்டு வக்ஃபு வாரிய நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளா்கள் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை அழைத்துப் பேசினாா்.

அப்போது, ஆக்கிரமிப்புகள் அகற்ற விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, இஸ்லாமியா்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.