/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 686 மனுக்கள்

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 686 மனுக்கள்

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:20 pm

Din

திருவண்ணாமலை/ஆரணி: திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 686 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வேளாண் பயிா்க் கடன்கள், புதிய நீா் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 629 மனுக்களைப் பெற்று விசாரித்தாா் ஆட்சியா்.

மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, நல உதவி அலுவலா் சூா்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதில் பட்டா, பட்டா மாற்றம், தமிழ் நில திருத்தம், மகளிா் உரிமைத்தொகை, பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 57 மனுக்கள் வரப்பெற்றன.