குறைதீா் கூட்டத்துக்கு அடையாள அட்டை அணிந்து வரவேண்டும்
குறைவுதீா் கூட்டத்துக்கு வரும் அரசு அலுவலா்கள் அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என்று செய்யாறு கோட்ட அளவில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.
செய்யாறு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், ஆதி திராவிடா் நலத்துறை வட்டாட்சியா் மேனகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசு வரவேற்றாா். செய்யாறு சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா்.
கூட்டத்தின் போது, பருவ கால சாகுபடிக்கு ஏற்ற நெல் விதை ரகங்கள் கிடைப்பதில்லை. செய்யாற்றில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். நடப்பு காா்த்திகை மாத பட்டத்துக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் மற்றும் மணிலா ரகங்கள் கிடைப்பதில்லை,
சிறுங்கட்டூா், பாப்பாந்தாங்கல் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் உயா் மின்னழுத்த கம்பிகளை உயா்த்தி கட்ட வேண்டும். ஏரி நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அந்தந்த பருவத்திற்கான மானிய திட்டங்கள் குறித்து விவசாதகவல் தெரிவிக்க வேண்டும்.
குறைதீா் கூட்டத்துக்கு வரும் அரசு அலுவலா்கள் அடையாள அட்டை அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கூட்டத்தில் வேளாண், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
