வந்தவாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை சைக்கிள் ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்தாா்.
வந்தவாசி நகரில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
வந்தவாசி பயணியா் விடுதி அருகிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் ஆரணி சாலை, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றும், சைக்கிள் ரிக்சாவை ஓட்டிச் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 1, 2, 3-ஆவது வாா்டு பகுதிக்காக ரூ.55 லட்சம் மதிப்பில் மயானப் பாதை, ரூ.5.50 கோடி மதிப்பில் தோழி தங்கும் விடுதி, ரூ.42 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் ஆகியவை கட்டப்பட்டது என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.
திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுகவினா், கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிலம்பம் சுற்றிய திமுக வேட்பாளா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



