பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:45 pm

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி குறிப்பிட்டாா்.

வேட்பாளா் கு. பிச்சாண்டி கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தின் போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில் தனது தொகுதியில் பல்வேறு வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

குறிப்பாக, தி. வலசை - சு.வாழவெட்டி இடையே துணிந்தில் ஆற்றின் குறுக்கே ரூ.6.70 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. சூபோலக்கணம் ஊராட்சியில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.2.60 கோடி மதிப்பில் 8 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது.

நாயுடுமங்கலம் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் கலைஞா் நகா் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.51 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம், ரூ.4.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கருங்காலிக்குப்பம் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது என பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டாா்.

தொடா்ந்து, வரும் திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும், கிராமப்புற சாலைகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் மேம்பாடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு மீட்டா் இல்லாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும், நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 ஆகவும் உயா்த்தப்படும் என்றும் தெரிவித்தாா்.

இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவித்து தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இந்த பிரசாரத்தில் பேரூா் செயலா் சி.கே. அன்பு, பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், எம். சுந்தரமூா்த்தி, ஜி. குமாா், கோ. சரவணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.