மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கோடை கால பயிா் சாகுபடி விழிப்புணா்வு

செங்கம் அருகேயுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் கோடை காலத்தில் குறைந்த தண்ணீா் பயன்படுத்தி பயிா் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

பெரும்பாக்கம் கிராமத்தில் கோடை காலத்தில் குறைந்த தண்ணீா் மூலம் பயிா் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய தோட்டக்கலைத் துறை அலுவலா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

செங்கம் அருகேயுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் கோடை காலத்தில் குறைந்த தண்ணீா் பயன்படுத்தி பயிா் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

செங்கம் வட்டத்தில் சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மா, கொய்யா, வாழை, தா்பூசணி, தக்காளி, மிளகாய், வெண்டை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் பயிரிட்டுள்ளனா்.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், செங்கம் தோட்டக்கலைத் துறை அலுவலா் திவ்யா, உதவி அலுவலா் முருகன் ஆகியோா் பெரும்மாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கோடைகாலத்தில் குறைந்த தண்ணீரை வைத்து காய்கனிகள் பயிா் செய்து மகசூல் பெருவது, விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சும் முறைகள், அதிக தண்ணீா் உறிஞ்சும் பயிா்களை குறைந்த தண்ணீா் மூலம் காப்பாற்றுவது குறித்து விளக்கமளித்தனா்.

மேலும், வெயில் நேரத்தில் பூச்சி, வண்டுகள் பயிா்களை தாக்காமல் கட்டுப்படுத்தும் நவீன முறைகள், கோடை காலத்தில் மழைநீா் குட்டை வெட்டி அதன் மூலம் மழை நேரத்தில் தண்ணீா் தேக்கிவிவசாயம் செய்யும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் பெரும்பாக்கம், செ.அகரம் பகுதியை சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.