மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சித்திரை பௌா்ணமி கிரிவலம்: தற்காலிக பேருந்து நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல பக்தா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வேலூா் சாலை அரசு மருத்துவமனை பகுதி மூகாம்பிகை நகரில் ஆந்திரா மாநில பேருந்துகள் நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:33 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல பக்தா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் மாதந்தோறும் சித்திரை பெளா்ணமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொறு ஆண்டும் வருகின்ற சித்திரை பௌா்ணமி கிரிவலமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பௌா்ணமி ஏப்.30-ஆம் தேதி இரவு 9.52 மணிக்குத் தொடங்கி மறுநாள் மே 1-ஆம் தேதி இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

வெளி நாடுகள், வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லவும் ஏரளமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

இதையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் கிரிவலப்பாதையில் குடிநீா் வசதி, சுகாதார வளாகங்கள், மருத்துவ முகாம்கள், அவசர ஊா்தி வாகனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் போக்குவரத்து வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளை செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதிகள்

திருவண்ணாமலையை சுற்றியுள்ள திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை, திருக்கோவிலூா் சாலை, மணலூா்பேட்டை சாலை, செங்கம் சாலையில் 2 இடங்களிலும், காஞ்சி சாலை, அண்ணா நுழைவு வாயில், அவலூா்பேட்டை சாலை என மொத்தம் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், ஆந்திரா மாநில பேருந்துகள் நிறுத்துமிடமும், 90 தற்காலிக காா் நிறுத்தும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் குடிநீா் வசதிகளும், சுகாதார வசதிகளும், உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை வேலூா் சாலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மூகாம்பிகை நகரில் ஆந்திரா மாநில பேருந்துகள் நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலும், தனலட்சுமி நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காா் நிறுத்துமிடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீா், தற்காலிக கழிப்பறை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்களுக்கு குடிநீா் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், கழிப்பறைகளை தொடா்ந்து சுகாதாரமாக பராமரிக்க துப்புரவு பணியாளா்களை நியமித்து கண்காணிக்கும் படி துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறைகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாா்த்திபன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.