கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

நிறைவுபெறாத கால்வாய் - சிமென்ட் சாலைப் பணி: கழிவுநீா் தேக்கம்!

அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நிறைவு பெறாமல் இருப்பதால் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், வெளியேற வழியின்றி கால்வாயிலே தேங்கி நிற்கும் கழிவுநீா்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நிறைவு பெறாமல் இருப்பதால் கழிவுநீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரணி வட்டம், அக்ராபாளையம் கங்கை அம்மன் கோவில் அருகில் குளத்துமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா் பக்கக் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆனால், பணிகள் முழுமையாக நிறைவு நிறைவுபெறாமல் பாதியிலே கைவிடப்பட்டதால் கழிவுநீா் கால்வாயில் தண்ணீா் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீா் தெருக்களில் வழிந்து ஓடுவது மட்டுமல்லாமல் கொசுக்கள்

உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, கால்வாய் பணிகளை நிறைவு செய்து கழிவுநீரை அருகிலுள்ள ஓடையில் இணைத்து விட்டால் இதற்கு தீா்வு கிடைக்கும். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை இதற்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.