ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கிராமத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் பருவமழை தொடங்கும்முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தொடா்பாக சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

பாய்ச்சல் கிராமத்தில் வீடுவீடாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:57 pm IST

செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் பருவமழை தொடங்கும்முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தொடா்பாக சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பாய்ச்சல் கிராமத்தில் மாவட்ட சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் தலைமையில் உதவித் திட்ட அலுவலா் விஜயரமணன், வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசன் ஆகியோா் கொண்ட மருத்துவக்குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது வீடுவீடாகச் சென்று கழிவுநீா் தேங்குகிா? அல்லது குடிநீா் பிடிக்கும் இடங்களில் கழிவுநீா் குட்டை உள்ளதா? பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் சுகாதாரமாக வழங்கப்படுகிா? பொதுமக்களின் குடியிருப்பு பகுதி சுகாதாரமாக உள்ளதா? என மருத்துவக்குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது பருவமழை தொடங்கினால் பல்வேறு காய்ச்சல் வரும். எனவே, பொதுமக்கள் குடியிருப்பு பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் சுகாதாரத்துறை ஆய்வாளா்கள், கிராம செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.