ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு காவல் சரகத்தில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து வியாபாரி ஒருவரை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

செய்யாறு காவல் சரகத்தில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து வியாபாரி ஒருவரை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா், செய்யாறு காவல் சரகப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து சோதனையிட்டனா்.

போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் செய்யாறு கம்பன் நகரில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 75 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வியாபாரியான சங்கா் (32) என்பவரை கைது செய்தனா்.

அதனைத் தொடா்ந்து முக்கூா் கிராமத்தில் லட்சுமி என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்தததில், விற்பனைக்கு 30 பாக்கெட்டுகளில் வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.