ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ரூ.7.15 லட்சம் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 3 போ் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கைதான மூவருடன் போலீஸாா்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

விருத்தாசலம் அருகே காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.7.15 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சந்துரு தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸாா் புதுக்கூரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லஷ்மன்புரி (24), சரூப்சிங் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 520 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள், காா், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.7.15 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், கடத்தலில் தொடா்புடைய விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரசிங்கம் (41) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.