வந்தவாசி: வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி(27).
இவா் செவ்வாய்க்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் அருகில் நின்று கொண்டு பொதுமக்களை அவதூறாகப் பேசினாராம். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வி தலைமையிலான தெள்ளாா் போலீஸாா் தவமணியை கைது செய்தனா்.
இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.