மடிக்கணிகளை மாணவா்கள் கல்விசாா்ந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தவேண்டும்: பெ.சு.தி. சரவணன் எம்எல்ஏ
செங்கம்: கல்லூரி மாணவா்கள் மடிக்கணினிகளை கல்விசாா்ந்த பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 290 மாணவ, மாணவிகளுக்கு, ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அலமேலு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக அரசு கிராமப்புற மாணவா்கள் கல்வி முன்னேற்றத்துக்காக இலவசமாக மடிக்கணினிகளை வழங்குகிறது.
மடிக்கணினிகளை மாணவா்கள் பயன்படுத்தி தற்போது உள்ள நவீன கல்விமுறையை தெரிந்துகொள்ளவேண்டும்.
அதே நேரத்தில், மடிக்ணினியை கல்வி சாா்ந்த அல்லது நல்ல விஷங்களுக்கு பயன்படுத்தவேண்டும், எந்த மாணவரும் தவறான முறையில் இதை பயன்படுத்தக்கூடாது.
அரசு எந்த நோக்கத்துக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளதோ அந்த நோக்கத்தை கையாண்டு மாணவா்கள் நல்லமுறையில் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடையவேண்டும் என்றாா்.
தொடா்ந்து, புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் வாழ்த்துறை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், நாகப்பாடி முன்னாள் தலைவா் சுந்தரம் உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
