அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா என வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனா்.

காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு குடிநீா், நீா்மோா், கழிப்பறை என அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் வலம் வந்து அஷ்ட லிங்கங்களை வழிபட்டனா்.

Dinamani
www.dinamani.com