திருக்கு முற்றோதல் பரிசளிப்பு விழா

திருக்கு முற்றோதல் பரிசளிப்பு விழா

திருவள்ளுவா் தின விழா திருக்கு முற்றோதல் நிகழ்வில் மாணவா்களுக்கு பரிசு வழங்கிய தலைமை ஆசிரியா்
Published on

செய்யாற்றில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு திருக்கு முற்றோதல் மற்றும் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா என வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை, செய்யாறு திருக்கு பயிற்சி வகுப்பு, செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கம், செய்யாறு ரோட்டரி சங்கம்

இணைந்து நடத்தியது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா்

ஜி.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா்.

திருக்கு பயிற்சியாளா் கவிஞா் எறும்பூா் கை. செல்வகுமாா் முன்னிலை வகித்து, வரவேற்றும், நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினாா்.

சிறப்பு விருந்தினா்களாக செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவா் டி.ஜி.எம். விஜயவா்மன், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநா் வி. சூரியநாராயணன், பொறியாளா் த. மருதவாணன், அக்ரி தனசேகா், தலைமை ஆசிரியா்கள் தேன்மொழி, கவிதா, ஆகியோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவிகளின் திருக்கு முற்றோதல், பேச்சுப் போட்டி என நடைபெற்றது.

அதில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

நிகழ்வில் செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் க.கோவேந்தன், துணைச் செயலா், எஸ். மோதிலால், எச். முபாரக், உடற்கல்வி ஆசிரியா்கள் சிவராமன், வெங்கடேசலு, திருக்கு திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com